"பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பிஹெச்டி பட்டம் பறிப்பு" -அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீது மாணவர் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடியை புகழ்ந்ததால், தனது பிஹெச்டி பட்டம் பறிக்கப்படுவதாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீது, மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் 200-வது ஆண்டு விழாவையொட்டி, செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டேனிஷ் ரஹீம் என்ற அந்த மாணவர், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மொழியியல் துறையின் தலைவர், தன்னை அழைத்து எச்சரித்ததாகவும், பின்னர் பிஹெச்டி பட்டத்தை வாபஸ் பெறுவதாக, பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, ரஹீமின் குற்றச்சாட்டை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
"விளம்பர மற்றும் விநியோக மொழி" பிரிவில், பிஹெச்டி பட்டம் வழங்குவதற்கு பதிலாக, தவறுதலாக "மொழியியல்" பிரிவில் வழங்கப்பட்டுவிட்டதாகவும், அது மாற்றி தரப்படும், என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், இதை மறுத்துள்ள மாணவர் ரஹீம், பிஹெச்டி பட்டத்தை மாற்றி தருவது நடைமுறையில் இல்லாதது, என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளார்.
Comments